துங்கா ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவன் சாவு


துங்கா ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவன் சாவு
x
தினத்தந்தி 21 Nov 2022 12:15 AM IST (Updated: 21 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிருங்கேரியில் துங்கா ஆற்றில் மூழ்கி பெங்ளூருவை சேர்ந்த கல்லூரி மாணவன் உயிரிழந்தார்.

சிக்கமகளூரு:-

பெங்களூருவை சோ்ந்தவர் சந்துரு (வயது 22). இவர் அங்குள்ள கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், அவரது கல்லூரியில் இருந்து சந்துரு உள்பட 60 மாணவர்கள் பஸ்சில் சிக்கமகளூருவுக்கு சுற்றுலா சென்றனர். சிக்கமகளூருவில் பல இடங்களுக்கு ெசன்ற அவர்கள், சிருங்கேரியில் உள்ள சாரதம்மன் கோவிலுக்கும் சென்றனர். அப்போது சந்துரு உள்பட சில மாணவர்கள், கோவில் அருகே ஓடும் துங்கா ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். அந்த சமயத்தில், சந்துரு திடீரென தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள், அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. இதையடுத்து சிருங்கேரி போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவர்கள், சந்துருவை காப்பாற்ற முயன்றனர். ஆனாலும் அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிருங்கேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story