வாடிக்கையாளர்கள் போல் வந்து நகைக்கடையில் தங்க கம்மல்கள் திருட்டு


வாடிக்கையாளர்கள் போல் வந்து   நகைக்கடையில் தங்க கம்மல்கள் திருட்டு
x
தினத்தந்தி 20 Oct 2022 12:15 AM IST (Updated: 20 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வாடிக்கையாளர்கள் போல் வந்து நகைக்கடையில் தங்க கம்மல்கள் திருட்டு நடந்துள்ளது.

பெங்களூரு: பசவனகுடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு நகைக்கடை உள்ளது. இந்த கடைக்கு நகைகள் வாங்குவதற்காக வாடிக்கையாளர்கள் போல் 2 பெண்கள் வந்தனர். அவர்கள் தங்க கம்மல்கள் வேண்டும் என்று கடையில் இருந்த ஊழியரிடம் கேட்டனர். அவரும், கடையில் இருந்த பல்வேறு தங்க கம்மல்களை எடுத்து காண்பித்தார். அப்போது 2 பெண்களும், விதவிதமான கம்மல்களை காண்பிக்கும்படி கூறினார்கள். பின்னர் ஊழியரின் கவனத்தை திசை திருப்பி கடையில் இருந்த ரூ.1.20 லட்சம் மதிப்பிலான 2 ஜோடி கம்மல்களை 2 பெண்களும் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து பசவனகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பெண்களையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story