பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக புகார்... போலீசார் நடவடிக்கை
புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் நடந்த போராட்டத்தில், பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக மாநில மகிளா காங்கிரஸ் தலைவி, மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில், பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக மாநில மகிளா காங்கிரஸ் தலைவி, துணைத் தலைவி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராகுல் காந்தியின் எம்.பி., பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில், கடந்த 7-ம் தேதி அண்ணாசாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, மகிளா காங்கிரஸ் தலைவி காந்தி, துணை தலைவி நிஷா ஆகியோர் பிரதமர் மோடியை மிரட்டு வகையில் பேசியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான புகாரின் பேரில், சட்ட விரோதமாக கூடுதல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், மகிளா காங்கிரஸ் தலைவி காந்தி, துணை தலைவி நிஷா மீது பெரிய கடை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story