வாக்காளர்களின் தகவல்களை திருடிய விவகாரம்: தனியார் தொண்டு நிறுவனம் மீது மாநகராட்சி போலீசில் புகார்
வாக்காளர்களின் தகவல்களை திருடிய விவகாரத்தில் தனியார் தொண்டு நிறுவனம் மீது மாநகராட்சி போலீசில் புகார் அளித்துள்ளது.
பெங்களூரு: பெங்களூருவில் 28 தொகுதிகளில் உள்ள வாக்காளர்களின் தகவல்களை திருடியதாக தனியார் தொண்டு நிறுவனம் மீதும், மந்திரி அஸ்வத் நாராயன் மீதும் காங்கிரஸ் தலைவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியிருந்தார்கள். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தும்படி மாநகராட்சிக்கு, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
அதாவது தனியார் தொண்டு நிறுவனம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி மாநகராட்சி அறிவுறுத்தி இருந்தது. ஆனால் தொண்டு நிறுவனம் வாக்காளர்களின் தகவல்களை திருடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து தொண்டு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கும்படியும், வாக்காளர்களின் தகவலை திருடப்பட்டது தொடர்பாக உரிய விசாரணை நடத்தும்படி மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ரங்கப்பா பெங்களூரு அல்சூர் கேட் மற்றும் காடுகோடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் அல்சூர் கேட் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.