15 கோடி பேருக்கு முழுமையாக கொரோனா தடுப்பூசி - உத்தரபிரதேசம் சாதனை


15 கோடி பேருக்கு முழுமையாக கொரோனா தடுப்பூசி - உத்தரபிரதேசம் சாதனை
x

15 கோடி பேருக்கு முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தி உத்தரபிரதேசம் சாதனை படைத்துள்ளது.

லக்னோ,

நாட்டிலேயே முதல் முறையாக 15 கோடிக்கு மேற்பட்டோருக்கு முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தி உத்தரபிரதேச மாநிலம் சாதனை புரிந்துள்ளது.

மாநிலத்தில் இதுவரை 15 கோடியே 1 லட்சத்து 73 ஆயிரத்து 30 பேருக்கு 2 'டோஸ்' தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாக அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தகுதியுள்ள அனைவருக்கும் 100 சதவீதம் முதல் 'டோஸ்' தடுப்பூசியும், 92 சதவீதம் பேருக்கு 2 'டோஸ்' தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளன என அவர் கூறினார்.


Next Story