பிராந்திய கட்சிகளை மதிக்கிறோம், பாஜகவை கூட்டு முயற்சியில் வீழ்த்துவோம்: ராகுல் காந்தி


பிராந்திய கட்சிகளை மதிக்கிறோம், பாஜகவை கூட்டு முயற்சியில் வீழ்த்துவோம்: ராகுல் காந்தி
x

எதிர்க்கட்சிகளுடன் இணைந்து கூட்டு முயற்சியாக பாஜகவை வீழ்த்துவோம். இந்தியாவை மீட்கும் போராட்டமாக அது இருக்கும் என்று ராகுல் காந்தி பேசினார்.

லண்டன்,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல்காந்தி லண்டனில் நடைபெற்ற " இந்தியாவுக்கான யோசனைகள்" என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது;- " "எதிர்க்கட்சியில் இருக்கும் நண்பர்களுடன் ஒருங்கிணைந்து நாம் செயல்பட வேண்டும். ஆதிக்க மனப்பான்மையுடன் நாங்கள் இல்லை. எதிர்க்கட்சிகளுடன் இணைந்து கூட்டு முயற்சியாக பாஜகவை வீழ்த்துவோம். இந்தியாவை மீட்கும் போராட்டமாக அது இருக்கும்.

மற்ற எதிர்க்கட்சிகளை விட எந்த வகையிலும் காங்கிரஸ் மேலானது அல்ல. நாங்கள் அனைவரும் ஒரே களத்தில் போராடுகிறோம். அவர்களுக்கான இடம் உள்ளது. எங்கள் இடத்தில் நாங்கள் போராடுகிறோம். ஆனால், ஆர்.எஸ்.எஸின் தேசிய பார்வைக்கும் காங்கிரஸ் தேசிய பார்வைக்கும் இடையேயான சித்தாந்த போர் நடைபெற்று வருகிறது" என்றார்.

அண்மையில், காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பாஜகவை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே தோற்கடிக்க முடியும். பிராந்திய கட்சிகளால் தோற்கடிக்க முடியாது என்று பேசியிருந்த்நார். பிராந்திய கட்சிகளுக்கு சித்தாங்கள் இல்லை எனவும் ராகுல் காந்தி பேசியது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலயில்தான் ராகுல் காந்தி தனது கருத்துக்கு விளக்கம் அளிக்கும் வகையில் பேசியுள்ளார்.


Next Story