காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விமானத்தை வாராணசியில் தரையிறக்க அனுமதி மறுக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வந்த விமானத்தை வாராணசியில் தரையிறக்க அனுமதி மறுக்கப்பட்டதாக காங்கிரஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து நேற்றிரவு தனி விமானம் மூலம் உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசி விமான நிலையத்திற்கு வருவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், வாராணசி விமான நிலையத்தில் கடுமையான நெரிசல் காரணமாக ராகுல் காந்தியின் விமானம் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் ராய் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து அஜய் ராய் கூறுகையில், "வாராணசி, பிரயாக்ராஜுக்கு வருகை தர ராகுல் காந்தி திட்டமிட்டிருந்தார். ஆனால், மாநில அரசின் அழுத்தம் காரணமாக அவரது விமானம் தரையிறங்க விமான நிலையம் அனுமதி அளிக்கவில்லை. ராகுல் காந்தியின் மீதுள்ள அச்சத்தால் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு அவரது விமானத்தை தரையிறக்க அனுமதிக்கவில்லை" என்றார்.
Related Tags :
Next Story