மணிப்பூர் நிலைமை குறித்து பிரதமர் மோடி மவுனம் கலைக்க வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்


மணிப்பூர் நிலைமை குறித்து பிரதமர் மோடி மவுனம் கலைக்க வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்
x

Image Courtacy: PTI

மணிப்பூர் நிலைமை குறித்து பிரதமர் மோடி மவுனம் கலைக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், முகுல் வாஸ்னிக் மற்றும் பக்த சரண்தாஸ் ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். மணிப்பூர் மாநிலத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை குறித்து பேசிய அவர்கள், "மணிப்பூரில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி பா.ஜ.க.வின் 'பிளவு அரசியலின்' விளைவு. மாநில அரசின் உளவுத்துறையின் தோல்வியின் விளைவும் கூட" என கூற்றம் சாட்டினார்.

தொடர்ந்து அவர்கள், "100-வது 'மனதின் குரல்' நிகழ்ச்சிக்கு பின் மணிப்பூரைப் பற்றி பிரதமர் ஏன் எதுவும் கூறவில்லை? 'மணிப்பூரின் குரல்' என்ன ஆனது? மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மணிப்பூரில் அமைதி திரும்புவதற்கு விடுத்த வேண்டுகோள் ஏன் முற்றிலும் தோல்வியடைந்தது?" என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

மேலும், "பிரதமர் தனது மவுனத்தைக் கலைத்து, மணிப்பூர் நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கவும், மாநிலத்தில் இயல்புநிலையை ஏற்படுத்தவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். மணிப்பூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் பார்வையிடவும், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவும் தேசிய அனைத்துக் கட்சிக் குழுவை அனுமதிக்க வேண்டும்" என வலியுறுத்தினர்.


Next Story