அமர்நாத் மேகவெடிப்பு - உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு சோனியாகாந்தி இரங்கல்


அமர்நாத் மேகவெடிப்பு - உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு சோனியாகாந்தி இரங்கல்
x

மேக வெடிப்பு காரணமாக இந்த வெள்ள பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

புதுடெல்லி,

ஜம்மு - காஷ்மீரின் அமர்நாத்தில் உள்ள குகைக் கோவிலில் இந்த ஆண்டுக்கான யாத்திரை, ஜூன் 30ல் துவங்கி, ஆக., 11 வரை நடக்க உள்ளது.கடல் மட்டத்தில் இருந்து, 12,755 அடி உயரத்தில் அமைந்துள்ள இப்பகுதியில் யாத்திரீகர்களின் பயணத்தையும் அவர்களின் பாதுகாப்பையும் கண்காணிக்கும் வகையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.

இந்நிலையில் அமர்நாத் குகை கோயில் இன்று திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேக வெடிப்பு காரணமாக இந்த வெள்ள பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.வெள்ளப்பெருக்கால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆற்றின் கரையோரம் அமைக்கப்பட்டிருந்த ஏராளமான கூடாரங்கள் அடித்து செல்லப்பட்டன.

மேக வெடிப்பு காரணமாக பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 40 பேர் காணாமல் போனதாக அஞ்சப்படுகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் அமர்யாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், தொடர்ந்து மழை பெய்து வருவதாகவும் இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்பு படையின் போலீசார் தெரிவித்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் வான்வழியாக மீட்கப்பட்டு சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், அமர்நாத் மேக மேக வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

ஜம்மு காஷ்மீரில் இல் உள்ள அமர்நாத் புனித குகைக் கோவிலுக்கு அருகே மேக வெடிப்பு காரணமாக ஏராளமான யாத்ரீகர்கள் பரிதாபமாக உயிரிழந்ததை பற்றி அறிந்து நான் மிகவும் வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story