காங்கிரஸ் கட்சி மூழ்கும் கப்பல்- பா.ஜனதா விமர்சனம்
காங்கிரஸ் கட்சி மூழ்கும் கப்பல் என்று பா.ஜனதா விமர்சனம் செய்துள்ளது.
பெங்களூரு: கர்நாடக பா.ஜனதா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-குலாம்நபி ஆசாத் காஷ்மீர் காங்கிரஸ் பிரசார குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அக்கட்சியில் 23 தலைவர்கள் கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். அக்கட்சிக்குள் உட்கட்சி பிரச்சினைகள் அதிகமாக உள்ளன.
ஆனால் அக்கட்சி பா.ஜனதாவை விமர்சிக்கிறது. காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கும் கப்பல். முதலில் உங்கள் பிரச்சினைகளை தீர்த்து கொள்ளுங்கள். அதன் பிறகு அடுத்தவரின் பிரச்சினை பற்றி பேசுங்கள். இவ்வாறு பா.ஜனதா குறிப்பிட்டுள்ளது.
Related Tags :
Next Story