ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் ராகுல் காந்தி சந்திப்பு
எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்ற பிறகு ராகுல் காந்தி முதல்முறையாக ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தார்.
புதுடெல்லி,
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஜனாதிபதி திரவுபதி முர்முவை இன்று ஜனாதிபதி மாளிகையில் சந்தித்துப் பேசினார். நாளை சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ராகுல் காந்தி, ஜனாதிபதியை சந்தித்து பூங்கொத்து வழங்கினார்.
எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்ற பிறகு ராகுல் காந்தி முதல்முறையாக ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான புகைப்படத்தை ஜனாதிபதி அலுவலகம் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.
முன்னதாக மத்திய மந்திரி சி.ஆர்.பாட்டீல், மத்திய இணை மந்திரி வி. சோமன்னா ஆகியோரும் ஜனாதிபதியை சந்தித்தனர்.
Related Tags :
Next Story