மைசூருவில் காங்கிரஸ் தலைவர்கள் வாக்களிப்பு


மைசூருவில் காங்கிரஸ் தலைவர்கள் வாக்களிப்பு
x
தினத்தந்தி 18 Oct 2022 12:15 AM IST (Updated: 18 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலையொட்டி மைசூருவில் காங்கிரஸ் தலைவர்கள் வாக்களித்தனர்.

மைசூரு:

அகில இந்தியா காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலில் மூத்த தலைவர்களான கர்நாடகத்தை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கேரளாவை சேர்ந்த சசிதரூா் தலைவர் பதவிக்காக போட்டியிட்டனர். இந்த தேர்தலுக்காக நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள் வாக்குசாவடிகளாக மாற்றப்பட்டது. இந்த தேர்தலில் வாக்குப்பதிவு நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தற்போது பாதயாத்திரை மேற்கொண்டுள்ள அகில இந்திய காங்கிரஸ கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது வாக்கை பல்லாரியில் கன்டெய்னர் லாரி கேரவனில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த வாக்குவாசடியில் செலுத்தினார்.

மேலும் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோர் பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். இதேபோல் மைசூர் மாவட்டத்தில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யதீந்திரா சித்தராமையா, தன்வீர் சேட், எச்.பி.மஞ்சுநாத், எம்.எல்.சி. திம்மையா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.கே.சோமசேகர், வாசு, களலே கேசவமூர்த்தி, முன்னாள் மந்திரி எச்.சி.மகாதேவப்பா, மைசூரு மாவட்ட காங்கிரஸ் தலைவர் விஜயகுமார், மைசூரு நகர காங்கிரஸ் தலைவர் மூர்த்தி, சுனில் போஸ் உள்பட 100-க்கும் மேற்பட்ட தலைவர்கள் வாக்களித்தனர்.


Next Story