நில முறைகேடு விவகாரம்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. உள்பட 5 பேர் மீது வழக்கு


நில முறைகேடு விவகாரம்:  காங்கிரஸ் எம்.எல்.ஏ. உள்பட 5 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 17 Oct 2022 12:15 AM IST (Updated: 17 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நில முறைகேடு விவகாரத்தில் :காங்கிரஸ் எம்.எல்.ஏ. உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு, மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு: கோலார் மாவட்டம் மாலூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக பணியாற்றி வருபவர் கே.ஒய்.நஞ்சேகவுடா. இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஆவார். இவர் மாலூர் தாலுகா நில மானிய குழு தலைவராகவும் உள்ளார். இந்த நிலையில் நஞ்சேகவுடா எம்.எல்.ஏ.வும், அந்த குழுவின் உறுப்பினர்களாக உள்ள ஒசக்கோட்டையை சேர்ந்த நாகராஜ், லட்சுமம்மா, நாகப்பா, மற்றொரு நாகராஜ் ஆகியோரும் சேர்ந்து 86 ஏக்கர் அரசு நிலத்தை தங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு முறைகேடாக ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சமூக ஆர்வலரான ராஜண்ணா என்பவர் மாலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

ஆனால் அவரது புகாரை போலீசார் ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து நஞ்சேகவுடா உள்பட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட கோரி பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் ராஜண்ணா மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜே.பிரீத் முன்பு நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மனு மீதான இறுதி விசாரணை நடந்தது. அப்போது நஞ்சேகவுடா எம்.எல்.ஏ. உள்பட 5 பேர் மீதும் அரசு நிலத்தை தெரிந்தவர்களுக்கு ஒதுக்கியது தொடர்பாக மாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story