ஊழலுக்கு பெயர் பெற்றது காங்கிரஸ் கட்சி


ஊழலுக்கு பெயர் பெற்றது காங்கிரஸ் கட்சி
x

ஊழலுக்கு பெயர் பெற்றது காங்கிரஸ் கட்சி என்று மந்திரி முனிரத்னா குற்றம் சாட்டியுள்ளார்.

கோலார் தங்கவயல்:-

ஊழல் குற்றச்சாட்டு

கோலாரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த மந்திரி முனிரத்னா கூறியதாவது:- காங்கிரஸ் கட்சி ஊழலுக்கு பெயர் பெற்ற கட்சி. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடைபெறாத ஊழலே இல்லை. இதனால்தான் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுக்காமல், பா.ஜனதாவை தேர்வு செய்தனர். மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா கட்சி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறது. இதுவரை மத்திய, மாநில அரசுகளின் எந்த ஊழல் குற்றச்சாட்டுகளும். பா.ஜனதாவின் ஆட்சியின் மீது உள்ள அதிருப்தியில் காங்கிரஸ் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறது.

சிறைக்கு சென்றவர்

காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் இருந்ததால்தான் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் பா.ஜனதாவிற்கு வந்தனர். அதை காங்கிரசினர் உணரவேண்டும். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டி.கே.சிவகுமார் என் மீதும் பா.ஜனதா கட்சியின் மீதும் வீண் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். டி.கே.சிவக்குமார் ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்றவர் என்பது அனைவருக்கும் தெரியும்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலர் ஊழல் புகாரில் சிக்கினர். இதை மறைத்துவிட்டு உத்தமர்கள் போன்று காங்கிரஸ் கட்சியினர் செயல்படுகின்றனர். அவர்களுக்கு நான் பதில் அளிக்க தேவையில்லை. கர்நாடகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் பா.ஜனதா அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story