பாதயாத்திரை பணிகளால் காங்கிரஸ் தலைவர் தேர்தல் 1 மாதம் தள்ளி போகிறது


பாதயாத்திரை பணிகளால் காங்கிரஸ் தலைவர் தேர்தல் 1 மாதம் தள்ளி போகிறது
x

காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பதவி வகித்து வருகிறார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பதவி வகித்து வருகிறார். புதிய தலைவரை தேர்வு செய்ய செப்டம்பர் 20-ந் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, செப்டம்பர் 7-ந் தேதி, 'பாரத் பாதயாத்திரை' என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர்வரை பாதயாத்திரை தொடங்குகிறது. பாதயாத்திரை பணிகளில் கவனம் செலுத்த வேண்டி இருப்பதாலும், சில மாநிலங்கள் தலைவர் தேர்தலுக்கான நடைமுறைகளை முடிக்காததாலும் தலைவர் தேர்தல் ஒரு மாதம் தள்ளி போகும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

அதன்படி, அக்டோபர் மாதம், காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடக்கிறது. வருகிற 28-ந் தேதி, காங்கிரஸ் காரிய கமிட்டி கூடி, தேர்தல் தேதியை முடிவு செய்கிறது. தீபாவளிக்குள் புதிய தலைவர் வந்து விடுவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


Next Story