எதிர்க்கட்சிகளை ஒழிக்க சதி: ராகுல் காந்திக்கு வழக்கு குறித்து கெஜ்ரிவால் விமர்சனம்


எதிர்க்கட்சிகளை ஒழிக்க சதி: ராகுல் காந்திக்கு வழக்கு குறித்து கெஜ்ரிவால் விமர்சனம்
x

பாரதிய ஜனதா கட்சி அல்லாத தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய சதி நடந்து கொண்டிருக்கிறது என்று ராகுல் காந்தி விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடியை அவதூறாக விமர்சித்து பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் கூறுகையில், "எதிர்க்கட்சிகளையும் அதன் தலைவர்களையும் ஒழிக்க சதி நடந்து கொண்டிருக்கிறது.

பாரதிய ஜனதா கட்சி அல்லாத தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய சதி நடந்து கொண்டிருக்கிறது. ராகுல் காந்தியுடன் எனக்கு கருத்துவேறுபாடுகள் உண்டு. ஆனால் ஒரு அவதூறு வழக்கில் அவரைச் சிக்க வைப்பது முறையில்லை. நான் கோர்ட்டை மதிக்கிறேன். ஆனால் தீர்ப்பை ஏற்கவில்லை" என்றார்.


Next Story