அசோக் கெலாட்டை நீக்க சதி நடக்கிறது: ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் மீது கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ கடும் தாக்கு!


அசோக் கெலாட்டை நீக்க சதி நடக்கிறது: ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் மீது கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ கடும் தாக்கு!
x

அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை ராஜஸ்தானில் தற்போதைய நிலை தொடர வேண்டும் என்று எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர்.

ஜெய்ப்பூர்,

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சசி தரூர் களமிறங்க உள்ளார்.

இந்த தேர்தலில் அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்வானால், ராஜஸ்தான் முதல்-மந்திரி பதவியிலிருந்து விலகுவார் எனத் தெரிகிறது. இந்நிலையில், அம்மாநில புதிய முதல் மந்திரி குறித்த சலசலப்பு கிளம்பியுள்ளது.

அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை ராஜஸ்தானில் தற்போதைய நிலை தொடர வேண்டும் என்று எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர்.இதனால் ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் பொறுப்பாளர் அஜய் மாக்கன் ஆகியோர் முன்னிலையில் நேற்று இரவு திட்டமிடப்பட்டிருந்த சட்டமன்றக் கட்சிக் கூட்டத்துக்கு எம்எல்ஏக்கள் சம்மதிக்கவில்லை. இன்று டெல்லி திரும்பிய அஜய் மாக்கன், எம்.எல்.ஏ.க்கள் ஒழுக்கம் தவறிவிட்டனர் என்று குற்றம் சாட்டினார்.

அங்கு முதல் மந்திரியாக சச்சின் பைலட்டின் பெயரை எம்.எல்.ஏ.க்கள் ஏற்கவில்லை என்பது தெளிவாகிறது.இதனால் ராஜஸ்தானில் பெரும் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது.அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை ராஜஸ்தானில் தற்போதைய நிலை தொடர வேண்டும் என்று எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், அசோக் கெலாட்டின் தீவிர ஆதரவாளரும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான சாந்தி குமார் தரிவால், காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் பொறுப்பாளர் அஜய் மாக்கன் மீது இன்று கடுமையான குற்றாச்சாட்டுகளை முன்வைத்தார்.

அவர் கூறுகையில், "காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் பொறுப்பாளர் ஒருதலைபட்சமாக ஒரு தரப்பின் பக்கம் சார்பானவர் என்று குற்றம் சாட்டுகிறேன். அவர் சச்சின் பைலட்டிற்காக பிரச்சாரம் செய்கிறார் மற்றும் அவரையே முதல் மந்திரியாக்க விரும்புகிறார்.

அசோக் கெலாட்டை முதல் மந்திரி பதவியில் இருந்து நீக்க ஆழமான சதி நடந்தது" என்று கூறினார்.


Next Story