கட்டிட தொழிலாளிகள் இலவச பஸ் பாஸ் மூலம் 45 கிலோ மீட்டர் பயணிக்கலாம்


கட்டிட தொழிலாளிகள் இலவச பஸ் பாஸ் மூலம் 45 கிலோ மீட்டர் பயணிக்கலாம்
x

கட்டிட தொழிலாளிகள் இலவச பஸ் பாஸ் மூலம் 45 கிலோ மீட்டர் பயணிக்கலாம் என்று அன்னதாணி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

மண்டியா:

கர்நாடக அரசு சார்பில் கட்டிட தொழிலாளிகளுக்கு அரசு பஸ்களில் பயணிக்க இலவச பஸ்பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மண்டியாவில் உள்ள கட்டிட தொழிலாளிகளுக்கு எம்.எல்.ஏ. அன்னதாணி இலவச பஸ்பாஸ் வழங்கினார். இதில் 14 கட்டிட தொழிலாளிகள் பயனடைந்தனர். அப்போது பேசிய அவர் கூறியதாவது:-

மாநிலம் முழுவதும் 39 லட்சம் கட்டிட தொழிலாளிகள் உள்ளனர். அதில் ஒரு லட்சம் பேருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கும் இந்த பஸ் பாஸ் கிடைக்க பெறும் நோக்கில், மாநில முதல்-மந்திரி மற்றும் போக்குவரத்து துறை மந்திரிக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் நடைபெறும் குளிர்கால கூட்டத்தொடரின் போது இது குறித்து விவாதிக்கப்படும். இந்த பஸ் பாசை கொண்டு கட்டிட தொழிலாளிகள் தங்கள் வீடுகள் இருக்கும் இடத்தில் இருந்து 45 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story