பெங்களூருவில் கைதான பயங்கரவாதிக்கு பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பு?


பெங்களூருவில் கைதான பயங்கரவாதிக்கு பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பு?
x

பெங்களூருவில் கைதான பயங்கரவாதிக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்புடன் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூரு:

பயங்கரவாதி கைது

பெங்களூரு தனிச்சந்திராவில் வசித்து வந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த முகமது ஆரிப் என்பவரை கடந்த 11-ந் தேதி கர்நாடக மாநில உள்நாட்டு பாதுகாப்பு போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் இணைந்து கைது செய்திருந்தார்கள். கைதான முகமது ஆரிப், கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆவார். அவர் பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவுடன் நிரந்தர தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

அதே நேரத்தில் அடுத்த மாதம் (மார்ச்) சிரியாவுக்கு செல்வதற்கு பயங்கரவாதி முகமது ஆரிப் திட்டமிட்டு இருந்ததுடன், விமான டிக்கெட்டும் எடுத்து வைத்திருந்தார். அதே நேரத்தில் அல்கொய்தா அமைப்புடன் சேருவதற்கும் அவர் தயாராகி வந்தது விசாரணையில் தெரியவந்தது. கைதான முகமது ஆரிப்பை காவலில் எடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உளவு அமைப்புடன் தொடர்பு

இந்த நிலையில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ். உடன் முகமது ஆரிப் தொடர்பில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாதிகளுடனும் முகமது ஆரிப் தொடர்பில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதுபற்றி முகமது ஆரிப்பிடம் போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூருவில் முகமது ஆரிப் கைதான போது, மும்பையில் பதுங்கி இருந்த மற்றொரு பயங்கரவாதியும் கைது செய்யப்பட்டு இருந்தார்.

அவருக்கும், முகமது ஆரிப்புக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் நாட்டின் உளவு அமைப்புடன் முகமது ஆரிப் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்களை போலீசார் திரட்டி வருவதாகவும், இதற்காக அவரது கம்ப்யூட்டர் மற்றும் கார்டு டிஸ்க்குகளை போலீசார் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story