இந்தியாவில் கொரோனா பாதிப்பு 60 ஆக அதிகரிப்பு


இந்தியாவில் கொரோனா பாதிப்பு 60 ஆக அதிகரிப்பு
x

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 20 அதிகரித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் ஒரேயடியாக 21 ஆக சரிந்தது. ஆனால் நேற்று தினசரி பாதிப்பு 60 ஆக உயர்ந்தது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 95 ஆயிரத்து 392 ஆக அதிகரித்தது.

கொரோனாவில் இருந்து 24 மணி நேரத்தில் 40 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 44 லட்சத்து 61 ஆயிரத்து 8 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 20 அதிகரித்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி, 1,469 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். தொடர்ந்து 10-வது நாளாக நேற்றும் கொரோனா உயிர்ப்பலி இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 915 ஆக நீடிக்கிறது.


Next Story