கர்நாடகத்தில் புதிதாக 968 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 968 பேருக்கு கொரோனா
x

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது.

பெங்களூரு

கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று 17 ஆயிரத்து 784 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 968 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 887 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தட்சிண கன்னடாவில் 21 பேர், உடுப்பியில் 17 பேர், மைசூருவில் 14 பேர், தார்வாரில் 10 பேர், பல்லாரி, சிக்கமகளூரு, பெங்களூரு புறநகரில் தலா 3 பேர், பெலகாவி, பீதர், ஹாசனில் தலா 2 பேர், துமகூரு, சிவமொக்கா, ராமநகர், ஹாவேரியில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 15 மாவட்டங்களில் புதிய பாதிப்பு இல்லை.


இதுவரை 39 லட்சத்து 66 ஆயிரத்து 420 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். வைரஸ் பாதிப்புக்கு தட்சிண கன்னடாவில் மட்டும் நேற்று ஒருவர் இறந்தார். இதுவரை 40 ஆயிரத்து 73 பேர் இறந்து உள்ளனர். 337 பேர் நேற்று குணம் அடைந்தனர். 39 லட்சத்து 21 ஆயிரத்து 387 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 4 ஆயிரத்து 918 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். பாதிப்பு 5.44 சதவீதமாக உள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. கர்நாடகத்தில் கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு 200-க்கும் கீழ் பதிவாகி வந்த நிலையில் நேற்று பாதிப்பு திடீரென அதிகரித்து ஆயிரத்தை நெருங்கியது சுகாதாரத்துறைக்கு அதிர்ச்சி அளித்து உள்ளது.


Next Story