கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 100-க்கு கீழ் சரிந்தது


கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு  100-க்கு கீழ் சரிந்தது
x

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 100-க்கு கீழ் சரிந்தது

பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று 13 ஆயிரத்து 861 பரிசோனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 78 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 8 பேருக்கும், தட்சிண கன்னடாவில் 11 பேருக்கும், மைசூருவில் 14 பேருக்கும், ராமநகரில் 13 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரே நாளில் 52 பேர் குணம் அடைந்தனர். கொரோனா பாதிப்பு விகிதம் 1 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. 2 ஆயிரத்து 861 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Related Tags :
Next Story