இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது


இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 13 April 2023 9:22 AM IST (Updated: 13 April 2023 9:22 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டி அதிரவைத்துள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது. அதாவது நேற்று பாதிப்பு 7 ஆயிரத்து 830 பேருக்கு பாதித்தது. இது 7 மாதங்களுக்குப் பிறகு (சரியாக 223 நாட்கள்) முதல் முறையாக அதிகபட்ச பாதிப்பு ஆகும்.

இந்த நிலையில், இன்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிப்பின் படி ஒருநாள் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டி அதிரவைத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 10,158- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 44,998- ஆக உயர்ந்துள்ளது.


Next Story