கர்நாடகாவில் மேலும் 1,713 பேருக்கு கொரோனா - 4 பேர் உயிரிழப்பு
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,713- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலத்தில் இன்று 1,713- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இன்று 4 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 40 லட்சத்து 40 ஆயிரத்து 111- ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40 ஆயிரத்து 166- ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,034- ஆகும். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 39 லட்சத்து 89 ஆயிரத்து 451- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்து 452- ஆக உள்ளது. பெங்களூரு நகரத்தில் மட்டும் 965- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story