தடுப்பூசி பதிவுக்கு பயன்படுகிற 'கோவின்' தளம், புதிய சேவைகளை வழங்க மத்திய அரசு நடவடிக்கை
நாட்டின் பெரும்பான்மை மக்கள் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு விட்டனர்.
புதுடெல்லி,
நாடு கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடியபோது, தடுப்பூசி செலுத்துவதற்கு பதிவு செய்கிற தளமாக 'கோவின்' தளத்தை மத்திய சுகாதார அமைச்சகம் உருவாக்கியது. இந்த தளம்தான், கொரோனா தடுப்பூசி செலுத்துகிறவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்குகிறது.
தற்போது கொரோனா தொற்று பரவல் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. நாட்டின் பெரும்பான்மை மக்கள் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு விட்டனர்.நாட்டின் பெரும்பான்மை மக்கள் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு விட்டனர்.
இந்த நிலையில் 'கோவின்' தளத்தை தொடர்ந்து தடுப்பூசி பதிவு தளமாக பயன்படுத்துவதுடன் வேறு சேவை நோக்கங்களுக்கு பயன்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இதை இந்தியாவின் உலக அளவிலான நோய் தடுப்பு திட்டம் மற்றும் பிறதேசிய சுகாதார திட்டங்களுக்கான தளமாக பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
மேலும், ஒட்டுமொத்த தடுப்பூசி திட்டத்தையும் இதன்வழியே டிஜிட்டல் மயமாக்கப்போகிறார்கள். இந்த தகவல்களை கோவின் தலைவரும், தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரியுமான டாக்டர் ஆர்.எஸ்.சர்மா தெரிவித்துள்ளார்.