மடிகேரி ராணுவ வீரரின் உடல் தகனம்


மடிகேரி ராணுவ வீரரின் உடல் தகனம்
x
தினத்தந்தி 11 Dec 2022 12:15 AM IST (Updated: 11 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஜார்கண்டில் மாரடைப்பால் இறந்த மடிகேரி ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.

குடகு:-

குடகு மாவட்டம் மடிகேரி தாலுகா கடகடலு கிராமத்தை சேர்ந்தவர் கே.கே.ஷிஜு (வயது 48). ராணுவ வீரரான இவர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை பிரிவில் பணியாற்றி வந்தார். பணியில் இருந்தபோது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி நேற்று ஹெலிகாப்டர் மூலம் பெங்களூரு விமான நிலையத்திற்கு உடல் வந்தது. பின்னர் அங்கிருந்து ராணுவ வாகனம் மூலம் மடிகேரியில் உள்ள கடகடலு கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. இங்கு அரசு பள்ளியில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. குடும்பத்தினர், உறவினர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு அதிகாரிகள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அங்கிருந்து வாகனத்தில் அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடகடலுவில் உள்ள மயானத்திற்கு எடுத்து வரப்பட்டது. அங்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.


Next Story