கிரிக்கெட் சூதாட்ட கும்பலை சேர்ந்த 14 பேர் கைது - ரூ. 2.21 கோடி பறிமுதல்


கிரிக்கெட் சூதாட்ட கும்பலை சேர்ந்த 14 பேர் கைது - ரூ. 2.21 கோடி பறிமுதல்
x

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் சேர்ந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லி,

தலைநகர் டெல்லியின் விஹர் பகுதியில் கிரிக்கெட் சூதாட்ட கும்பலின் தலைவன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நேற்று அப்பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கிரிக்கெட் சூதாட்ட கும்பலின் தலைவன் அங்கித் கோயலை (வயது 35) போலீசார் கைது செய்தனர். அங்கித் இடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிரிக்கெட் சூதாட்ட கும்பலை சேர்ந்த மேலும் 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட கும்பலிடமிருந்து ரூ. 2.24 கோடி பணம், 18 செல்போன்கள், லேப் டாப் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.


Next Story