அலைமோதிய பக்தர்கள் கூட்டம் - திருப்பதி உண்டியலில் ஒரே நாளில் ரூ.5.14 கோடி காணிக்கை


அலைமோதிய பக்தர்கள் கூட்டம் - திருப்பதி உண்டியலில் ஒரே நாளில் ரூ.5.14 கோடி காணிக்கை
x

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரே நாளில் 5 கோடியே 14 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். வார விடுமுறை நாள் என்பதால் ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அப்போது அவர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகிறார்கள். அதேபோன்று வேண்டுதலை நிறைவேற்ற முடி காணிக்கையும் செலுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரே நாளில் 5 கோடியே 14 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது. நேற்று ஒரே நாளில் கோயிலுக்கு 80 ஆயிரத்து 312 பக்தர்கள் வருகை தந்ததால், ஏழுமலையானின் காணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 5 கோடியே 14 லட்சம் ரூபாயை உண்டியல் காணிக்கையாகவும், 29 ஆயிரத்து 538 பேர் தலைமுடியை காணிக்கையாகவும் கொடுத்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது


Next Story