இந்தியாவில் 9 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பு
2022 ஜூலை முதல் செப்டம்பர் வரையில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 4.4% ஆக அதிகரித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் நடப்பு கணக்கு பற்றாக்குறை கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2022-ம் ஆண்டு செப்டம்பர் காலாண்டில் ஜி.டி.பி. அளவில் 4.4% ஆக அதிகரித்துள்ளது. மொத்த ஏற்றுமதி அளவை விட மொத்த இறக்குமதி அதிகரிக்கும் போது நடப்பு கணக்கு பற்றாக்குறை உருவாகிறது.
2022 ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2-வது காலாண்டில், நடப்பு கணக்கு பற்றாக்குறை 4.4% ஆக 3 ஆயிரத்து 640 கோடி டாலராக அதிகரித்துள்ளது. அதே சமயம் 2022 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 2.2% ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் போரின் காரணமாக கச்சா எண்ணெய் விலை மற்றும் இதர மூலப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாலும், ஏற்றுமதிகளின் அளவு சரிந்துள்ளதாலும் நடப்பு கணக்கு பற்றாக்குறை வெகுவாக அதிகரித்துள்ளது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Related Tags :
Next Story