மோடிக்கு குறையாத செல்வாக்கு: மீண்டும் பிரதமராக 49% மக்கள் விருப்பம்- கருத்துக் கணிப்பில் தகவல்
மோடியே மீண்டும் பிரதமர் ஆக 49 சதவீத மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தற்போதே கட்சிகள் தயாராகி வரும் நிலையில், மோடியே மீண்டும் பிரதமராக 49% மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் யார் பிரதமராக வரவேண்டும் என்று ஏபிபி செய்தி நிறுவனம் மற்றும் சி வோட்டர் இணைந்து நாடு முழுவதும் கருத்து கணிப்பு நடத்தியது. இதில், 49 சதவீதம் பேர் மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.
18 சதவீதம் பேர் ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். யோகி ஆதித்யநாத்துக்கு 6 சதவீதம் பேரும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5 சதவீதம் பேரும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 2 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story