அரசுக்கு எதிராக தலித் அமைப்பினர் ஒன்றிணைய வேண்டும்


அரசுக்கு எதிராக தலித் அமைப்பினர் ஒன்றிணைய வேண்டும்
x

அரசுக்கு எதிராக தலித் அமைப்பினர் ஒன்றிணைய வேண்டும் என்று மாநில தலித் சங்க தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மைசூரு-

கர்நாடகத்தில் தலித்துகளுக்கு எதிராக நடக்கும் அடக்குமுறைகளுக்கு தீர்வு காண்பதற்காக அனைத்து தலித் சங்கத்தினர் சார்பில் மைசூருவில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட மாநில தலித் சங்கங்களின் தலைவர் மாவள்ளி சங்கர் கூறியதாவது:-

கர்நாடக மாநிலத்தில் ஏராளமான தலித் சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த தலித் சங்கங்கள் தற்போது உடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த சங்கங்கள் அனைத்தும் தங்களின் ஒற்றுமையை இழந்துள்ளது. இதனால் ஒவ்வொரு அமைப்பினரும், தனித்தனியாக பிரச்சினைகளை அனுபவித்து வருகிறது. சமுதாய ரீதியாகவும், மத ரீதியாகவும் பல இன்னல்களை தலித் மக்கள் அனுபவித்து வருகிறது. இதற்கு பிரிந்து கிடக்கும் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். அதன்படி பிரிந்து கிடக்கும் அனைத்து தலித் சங்கங்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக டிசம்பர் மாதம் 6-ந் தேதி பெங்களூருவில் லட்சக்கணக்கான தலித் மக்களால் பிரமாண்டமான நீலப்படை மாநாடு நடைபெறுகிறது. இதில் அனைத்து தலித் சங்கத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story