ஒருவரின் நிலத்திற்குள் புகுந்த பசுவை மீட்க வந்த பெண்ணை கட்டி வைத்து செருப்பால் அடித்த கொடூரம்
கர்நாடகாவில் ஒருவரின் நிலத்திற்குள் புகுந்த பசுவை மீட்க வந்த பெண்ணை கட்டி வைத்து செருப்பால் அடித்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
கொப்பல்,
கர்நாடகாவில் உயர்சாதியினர் என்று கூறப்படும் ஒருவரின் நிலத்திற்குள் புகுந்த பசுவை மீட்க வந்த தலித் பெண்ணை கட்டி வைத்து செருப்பால் அடித்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரிஷ் கும்பர் என்ற நபரின் நிலத்திற்குள் ஷோபம்மா ஹரிஜன் என்ற பெண்ணின் பசு சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கும்பர், மாட்டை பிடித்து தன்னுடைய வீட்டின் அருகே கட்டி வைத்துள்ளார்.
இதையடுத்து பசுவை மீட்க சென்ற ஷோபம்மாவை கும்பர் கட்டிவைத்து செருப்பால் அடித்து கொடூரமாக தாக்கியுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பர் மீது பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story