கோலார் தங்கவயல் நகரசபைக்கு தலைவரை நியமிப்பதில் தாமதம்


கோலார் தங்கவயல் நகரசபைக்கு தலைவரை நியமிப்பதில் தாமதம்
x

கோலார் தங்கவயல் நகரசபைக்கு தலைவரை நியமிக்காமல் இழுத்தடிப்பதால் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

கோலார் தங்கயவல்:-

நகரசபை தலைவர் பதவி

கோலார் தங்கவயல் நகரசபையின் தலைவராக இருந்தவர் வள்ளல் முனிசாமி. இவரது பதவி காலம் கடந்த மாதத்துடன் முடிவடைந்தது. இந்தநிலையில் கடந்த ஒரு மாதங்கள் நிறைவடைந்தும், நகரசபைக்கு புதிய தலைவர்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. மேலும் புதிய தலைவர்களை நியமனம் செய்வதில் மாவட்ட நிர்வாகம் முழு கவனம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் பிறப்பு, இறப்பு சான்றிதழ், அரசு சலுகைகள், வளர்ச்சி திட்டப்பணிகள் ஆகியவை கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் எந்த கவுன்சிலர்களும் நகரசபை வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தலைவர் நியமிக்கப்பட்டால் மட்டுமே சரியாக பணிகள் நடக்கும். கவுன்சிலர்களுக்கும் வேலைகள் இருக்கும். நகரசபை ஊழியர்களாலும் சரியாக பணியாற்ற முடியவில்லை.

பொதுமக்கள் அவதி

நகரசபை தலைவரின் ஒப்புதல் இல்லாமல் எந்த ஆவணங்களையும் வழங்க முடியாது என்று கூறிவிடுகின்றனர். இதனால் கோலார் தங்கவயலில் நடக்க இருந்த பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் முடக்கி கிடக்கிறது. அதே நேரம் நகரசபை தலைவர் நியமிக்கப்படாமல் இருப்பதால், இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்குவதற்கு, இந்த இடைத்தரகர்கள், பொதுமக்களிடம் இருந்து அதிகளவு பணம் லஞ்சமாக பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் மாவட்ட, தாலுகா நிர்வாக அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


Next Story