பிரியாணி கொண்டு வருவதில் தாமதம் - உணவக ஊழியரை கடுமையாக தாக்கிய நபர்....அதிர்ச்சி வீடியோ
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நொய்டா,
நொய்டாவில் உள்ள அன்சல் பிளாசா மாலில் உள்ள ஜாக் உணவகம் உள்ளது.இந்த உணவகத்திற்கு நேற்று இரவு வந்த 3 நபர்கள் பிரியாணி ஆர்டர் செய்துள்ளனர்.
பிரியாணி கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்களில் ஒருவர் தனது இருக்கையில் இருந்து எழுந்து உணவக ஊழியரை கடுமையாக தாக்கியுள்ளார்
இந்த தாக்குதல் சம்பவம் உணவகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதில் அந்த 3 பேர் கைது செய்யப்ட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,இந்த சம்பவம் தொடர்பாக நொய்டாவில் உள்ள நாலெட்ஜ் பார்க் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story