டெல்லி: 10 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு அமர்த்தி, தீயால் சுட்டு கொடுமை; பெண் விமானி, கணவரை அடித்து, நொறுக்கிய கும்பல்


டெல்லி:  10 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு அமர்த்தி, தீயால் சுட்டு கொடுமை; பெண் விமானி, கணவரை அடித்து, நொறுக்கிய கும்பல்
x
தினத்தந்தி 19 July 2023 4:51 PM IST (Updated: 19 July 2023 5:38 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் 10 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு அமர்த்தி, தீயால் சுட்டு கொடுமை செய்த பெண் விமானி மற்றும் அவரது கணவரை கும்பல் ஒன்று அடித்து தாக்கி உள்ளது.

புதுடெல்லி,

டெல்லியின் துவாரகா நகரில் வசித்து வரும் ஒரு தம்பதி 10 வயது சிறுமியை தங்களது வீட்டு வேலைக்காக பணியில் அமர்த்தினர். அவர்களில் மனைவி பெண் விமானியாகவும், அவரது கணவர் விமான பணியாளராகவும் உள்ளார்.

கடந்த 2 மாதங்களாக வேலை பார்த்து வந்த நிலையில், அந்த சிறுமியை அவர்கள் அடித்து, கொடுமைப்படுத்தினர்.

அந்த சிறுமியின் உடலில் தீயால் சுட்ட காயங்கள் உள்பட பல காயங்கள் காணப்பட்டன. இதனை அவரது உறவினர் ஒருவர் கவனித்துள்ளார்.

இதன்பின், அந்த தம்பதியின் வீட்டுக்கு திரண்டு சென்ற கும்பல் ஒன்று இருவரையும் அடித்து, நொறுக்கினர். இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

இதுபற்றி துவாரகா நகர துணை காவல் ஆணையாளர் ஹர்ச வர்தன் கூறும்போது, சம்பவ பகுதிக்கு நாங்கள் சென்றபோது, 10 வயது சிறுமியை அந்த தம்பதி வீட்டு வேலைக்கு அமர்த்தி இருந்தது தெரிய வந்தது.

சிறுமிக்கு நடத்திய மருத்துவ பரிசோதனையில் சில காயங்கள் மற்றும் தீயால் சுட்ட அடையாளங்கள் தெரிய வந்தன. வழக்கு பதிவு செய்து இருக்கிறோம். கணவன் மற்றும் மனைவி இருவரையும் பிடித்து, கைது செய்து உள்ளோம். சிறுமிக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.


Next Story