டெல்லி; லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் தீ விபத்து
டெல்லி லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் தீ விபத்து ஏற்பட்டது.
புது டெல்லி,
டெல்லியில் லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அங்கு ஏராளமான மாணவியர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று கல்லூரியின் உடற்கூறியல் துறையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் 7 தீயணைப்பு வாகனங்களில் சென்று தீ மற்ற இடங்களுக்கு பரவுவதற்கு முன் அணைத்தனர். இதனால் கல்லூரி வளாகம் முழுவதும் பரபரப்பானது. இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதமோ யாருக்கும் எந்த வித காயமோ ஏற்படவில்லை. தீ விபத்திற்கான காரணம் குறித்து தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story