டெல்லி பிரசாந்த் விஹார் பகுதியில் உணவகத்தில் தீ விபத்து..!


டெல்லி பிரசாந்த் விஹார் பகுதியில் உணவகத்தில் தீ விபத்து..!
x

நேற்று அதிகாலை, டெல்லி காந்திநகரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பெரிய தீ விபத்து ஏற்பட்டது.

டெல்லி,

தலைநகர் டெல்லியின் பிரசாந்த் விஹார் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டதாக டெல்லி தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து ஏழு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

முன்னதாக நேற்று அதிகாலை, டெல்லி காந்திநகரில் உள்ள ரகுபர் புரா-2 பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தில் தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

தொழிற்சாலைக்குள் சிக்கியிருந்த நான்கு பேர் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை.


Next Story