டெல்லி கவர்னர் நிகழ்ச்சியை புறக்கணித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்


டெல்லி கவர்னர் நிகழ்ச்சியை புறக்கணித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்
x

கோப்புப்படம்

டெல்லி கவர்னர் நிகழ்ச்சியை அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் புறக்கணித்தார்.

புதுடெல்லி,

டெல்லி அரசின் ஆயத்தீர்வை கொள்கை மீதான முறைகேடு புகார் குறித்து கவர்னர் சக்சேனா சி.பி.ஐ. விசாரணைக்கு சிபாரிசு செய்துள்ளார். இதனால், அவருடன் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளார்.

வழக்கமாக, வாரந்தோறும் நடக்கும் கவர்னருடனான சந்திப்பை கடந்த 22-ந் தேதி புறக்கணித்தார். இ்ந்நிலையில், நேற்று கவர்னரும், முதல்-மந்திரியும் இணைந்து 1 லட்சம் மரக்கன்று நட்டு வைப்பதை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், உடல்நிலையை காரணம் காட்டி, அந்த நிகழ்ச்சியையும் கெஜ்ரிவால் புறக்கணித்தார்.


Next Story