தொழிலில் நஷ்டம்: மனைவி, மகள்களை துப்பாக்கியால் சுட்டு கொன்று தொழிலதிபர் தற்கொலை...!
மனைவி, மகள்களை துப்பாக்கியால் சுட்டுகொன்ற தொழிலதிபர் தற்கொலை செய்துகொண்டார்.
புதுடெல்லி,
புதுடெல்லியின் ஜாஃப்ராபாத் பகுதியை சேர்ந்த ஆயத்த ஆடை தொழிலதிபர் இஷார் அகமது (வயது 40). இவரது மனைவி ஃபரீன். இந்த தம்பதிக்கு யாஷிகா (வயது 13) இனயா (வயது 4) என இரு மகள்கள் உள்ளனர்.
இதனிடையே, கடந்த சில மாதங்களாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், இஷார் கடன் தொல்லை, மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில், மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ள இஷார் இன்று மதியம் தனது மனைவி, மகள்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். பின்னர் தன்னை தானே சுட்டு இஷாரும் தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story