வெடி குண்டு மிரட்டல்: டெல்லியில் இருந்து புனே சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தீவிர சோதனை
டெல்லியில் இருந்து புனேவிற்கு சென்று கொண்டிருந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் வெடி குண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.
புதுடெல்லி,
டெல்லியில் இருந்து புனேவிற்கு புறப்பட இருந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் வெடி குண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. தொலைபேசியில் அழைப்பு விடுத்து இந்த மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மாலை 6.30 மணியளவில் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் விமானம் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சந்தேகத்திற்கு இடமான வகையில் எதுவும் கண்டறியப்படவில்லை. இதையடுத்து மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது
Related Tags :
Next Story