டெல்லியில் கட்டிடம் இடிந்து விபத்து: 2 பேர் படுகாயம்; இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரம்!
டெல்லி ஆசாத் மார்க்கெட் பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் உள்ள ஆசாத் மார்க்கெட் பகுதியில் இன்று காலை எதிர்பாராத விதமாக ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் படுகாயம் அடைந்தனர், மேலும், 5 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது.
இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும், மூன்று தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக அப்பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
தொடர்ந்து மீட்ப்புபணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. முழுமையான சேத விவரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story