பாஜக அல்லாத அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைப்போம் - கெஜ்ரிவால் சந்திப்புக்கு பின் சரத் பவார் பேட்டி


பாஜக அல்லாத  அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைப்போம் - கெஜ்ரிவால் சந்திப்புக்கு பின் சரத் பவார் பேட்டி
x

மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார்.

மும்பை,

டெல்லியில் அதிகாரிகள் மாற்றம், நியமனம் போன்றவற்றில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக டெல்லி அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், இதுபற்றிய வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கே அதிகாரம் இருப்பதாக கடந்த வாரம் அதிரடி தீர்ப்பு அளித்தது.

இந்த நிலையில் அதிகாரிகள் நியமனம் மற்றும் மாற்றத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய தலைநகர் சிவில் சர்வீசஸ் ஆணையத்துக்கு அதிகாரம் அளிப்பதற்கான அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை நீர்த்து போகச் செய்யும் வகையில் இந்த அவசர சட்டம் அமைந்துள்ளது. இதனால் கொதிப்படைந்த ஆம் ஆத்மி மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பா.ஜனதா அல்லாத கட்சி தலைவர்களை சந்தித்து, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்தநிலையில், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோரைத் தொடர்ந்து இன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்துப் பேசி வருகிறார்.

மராட்டியத்தில் சரத் பவாரின் இல்லத்தில் இந்த சந்திப்பு சந்திப்பு நடைபெற்று வருகிறது. பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானும் உடனிருக்கிறார்.

டெல்லி மக்களின் நலன், உரிமைகளைக் காப்பதற்காக நாடு முழுவதும் என் பயணத்தைத் தொடங்குவதாக கெஜ்ரிவால் முன்னதாக தெரிவித்திருந்தார்.

இதையடுத்து டெல்லி அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

கெஜ்ரிவால் சந்திப்பிக்கு பின் சரத் பவார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

நாட்டில் ஒரு வித நெருக்கடி உள்ளது, இது டெல்லிக்கு மட்டுப்படுத்தப்பட்ட பிரச்சினை அல்ல. என்சிபி மற்றும் மராட்டிய மக்கள் கெஜ்ரிவாலுக்கு ஆதரவளிப்பார்கள். கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக மற்ற தலைவர்களிடமும் பேசுவோம். பாஜக அல்லாத அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.


Next Story