அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து, புதுவையில் இளைஞர் காங்கிரசார் நூதன ஆர்ப்பாட்டம்
காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து, புதுச்சேரியில் இளைஞர் காங்கிரசார் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி,
காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து, புதுச்சேரியில் இளைஞர் காங்கிரசார் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காமராஜர் சிலை அருகில், இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஆனந்தபாபு தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில காங்கிரஸ் தலைவர் வைத்தியலிங்கம் எம்.பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விலைவாசி உயர்வை கண்டித்து மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக காங்கிரஸார் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story