உப்பள்ளி-புனே இடையே நேரடி விமான சேவை; மக்கள் மகிழ்ச்சி


உப்பள்ளி-புனே இடையே நேரடி விமான சேவை; மக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 7 Feb 2023 12:15 AM IST (Updated: 7 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உப்பள்ளி-புனே இடையே நேரடி விமான சேவை தொடங்கியது.

உப்பள்ளி:

தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் கோகுல்ரோடு பகுதியில் விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விமானம் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் உப்பள்ளியில் இருந்து புனேவுக்கும் இண்டிகோ விமானம் இயக்கப்பட்டது. ஆனால் அந்த விமானம் உப்பள்ளியில் இருந்து ஐதராபாத் வழியாக புனேவுக்கு சென்று வந்தது. இதனால் மக்கள் அவதி அடைந்து வந்தனர். மேலும், உப்பள்ளியில் இருந்து புனேவுக்கு நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று உப்பள்ளியில் இருந்து புனேவுக்கு நேரடி விமான சேவை நேற்று தொடங்கப்பட்டது. உப்பள்ளியில் இருந்து தினமும் காலை 7 மணிக்கு புனேவுக்கு விமானம் இயக்கப்பட உள்ளது. முதல் நாளான நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. உப்பள்ளி-புனே இடையே நேரடி விமானம் இயக்கப்பட்டதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story