எம்.பி பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதிநீக்கம் - அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் அவசர ஆலோசனை


எம்.பி பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதிநீக்கம் -  அடுத்தக்கட்ட  நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் அவசர ஆலோசனை
x

ராகுல் காந்தி விவகாரத்தில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, கடந்த 2019 மக்களவை தேர்தல் பிரசாரத்தில் மோடி என்ற பெயரை பயன்படுத்தி அவதூறாக பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத் சூரத் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. மேலும், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு உடனடி பிணையும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்து உள்ளது. இதற்கு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளி கடும் கண்டனத்தை பதிவுசெய்துள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மாலை 5 மணிக்கு அவசர ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.ராகுல் காந்தி விவகாரத்தில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.


Next Story