பாஜகவின் சர்ச்சை கருத்து: உள்நாட்டில் பிளவுபட்ட இந்தியா, தற்போது உலகளவில் பலவீனமாகிறது - ராகுல்காந்தி விமர்சனம்


பாஜகவின் சர்ச்சை கருத்து: உள்நாட்டில் பிளவுபட்ட இந்தியா, தற்போது உலகளவில் பலவீனமாகிறது - ராகுல்காந்தி விமர்சனம்
x
தினத்தந்தி 6 Jun 2022 4:41 PM IST (Updated: 6 Jun 2022 4:48 PM IST)
t-max-icont-min-icon

பாஜகவின் சர்ச்சை கருத்து உலகளவில் இந்தியாவின் நிலையைக் கெடுத்துவிட்டதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியுள்ளார்.


புதுடெல்லி,

முகமது நபிகள் குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர்கள் நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிந்தால் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து, அரபு நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பாக சவுதி அரேபியா, குவைத், கத்தார், ஈரான், எகிப்து மற்றும் ஓமன் ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டன. இந்நிலையில் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர்கள் நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிந்தால் ஆகிய இருவரை நீக்கம் செய்து பாஜக அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இந்தநிலையில் ராகுல்காந்தி டுவிட்டர் பதிவில்

"உள்நாட்டில் பிளவுபட்ட இந்தியா, தற்போது உலகளவில் பலவீனமாகிறது. பாஜகவின் வெட்கக்கேடான மதவெறி நம்மைத் தனிமைப்படுத்தியது மட்டுமல்லாமல், உலகளவில் இந்தியாவின் நிலையைக் கெடுத்துவிட்டது என பதிவிட்டுள்ளார்.


Next Story