டி.கே.சிவக்குமார்-சித்தராமையாவுக்கு ஞானம் குறைவு


டி.கே.சிவக்குமார்-சித்தராமையாவுக்கு ஞானம் குறைவு
x
தினத்தந்தி 27 March 2023 12:15 AM IST (Updated: 27 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

டி.கே.சிவக்குமார்-சித்தராமையா ஆகியோருக்கு ஞானம் குறைவு என்று வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கூறியுள்ளார்.

பெங்களூரு:-

இதுகுறித்து வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அழுத்தம் கொடுக்கவில்லை

ஒக்கலிகர்கள், லிங்காயத் சமூகத்திற்கு இட ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளோம். இந்த விஷயங்கள் நாங்கள் மடாதிபதிக்கு போன் செய்து அழுத்தம் கொடுத்ததாக காங்கிரஸ் தலைவர்கள் சொல்கிறார்கள். நாங்கள் அவ்வாறு யாருக்கும் அழுத்தம் கொடுக்கவில்லை. டி.கே.சிவக்குமார், சித்தராமையாவுக்கு ஞானம் இல்லை என்று எனக்கு நினைக்க தோன்றுகிறது.

அவ்வாறு கருத்து கூறுவது அந்த மடாதிபதியை அவமதிப்பது போன்றதாகும். காங்கிரசாருக்கு முஸ்லிம்கள் மீது அதிக அன்பு இருக்கிறது. இட ஒதுக்கீட்டை உயர்த்தியதை காங்கிரசாரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இதை ஏன் செய்யவில்லை. தலித் சமூகத்தில் உள் இட ஒதுக்கீடும் கொடுத்துள்ளோம். இட ஒதுக்கீடு விஷயத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் மாநில அரசின் முடிவை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

வாபஸ் பெறட்டும்

காங்கிரசாருக்கு வயிறு எரிந்து கொண்டிருக்கிறது. இந்த இட ஒதுக்கீடு உயர்வை தைரியம் இருந்தால் காங்கிரஸ் வாபஸ் பெறட்டும் பார்க்கலாம். இன்னும் கூடுதலாக இட ஒதுக்கீடு வேண்டும் என்று ஒக்கலிகர்கள், லிங்காயத்துக்ள கேட்டுள்ளனர். அதை பின்னர் பார்க்கலாம். காங்கிரசார் இந்த மாநிலத்தில் பிச்சைக்காரர் போன்றவர்கள்.

காங்கிரஸ் எங்கும் இல்லை. பிச்சைக்காரர்களை போல் அங்கொன்றும், இங்கொன்றுமாக அக்கட்சியினர் உள்ளனர். பசவராஜ் பொம்ம '420' முதல்-மந்திரி என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார். இதன் மூலம் அவர் முதல்-மந்திரியை அவமதித்துள்ளார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.


Next Story