தனது பிறந்தநாளான இன்று எந்த வித கொண்டாட்டங்களிலும் ஈடுபட வேண்டாம் : தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்


தனது பிறந்தநாளான இன்று எந்த வித கொண்டாட்டங்களிலும் ஈடுபட வேண்டாம் : தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்
x

Image Courtesy : PTI 

தினத்தந்தி 19 Jun 2022 1:38 AM IST (Updated: 19 Jun 2022 1:39 AM IST)
t-max-icont-min-icon

தனது பிறந்தநாளான இன்று எந்த விதமான கொண்டாட்டங்களிலும் ஈடுபட வேண்டாம் என்று கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுடெல்லி ,

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு இன்று (ஜூன் 19) 52வது பிறந்த நாள் . இதனையொட்டி காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு கட்சித்தலைவர்கள் உள்பட பலதரப்பினரும் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ராகுல் காந்தி, தனது பிறந்தநாளான இன்று எந்த விதமான கொண்டாட்டங்களிலும் ஈடுபட வேண்டாம் என்று கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது

இளைஞர்கள் வேதனையில் உள்ளனர். இந்த நேரத்தில் அவர்களுடனும் அவர்களது குடும்பங்களுடனும் நாம் நிற்க வேண்டும்" என்று அக்னிபாத் போராட்டங்களைப் குறிப்பிட்டு ராகுல் காந்தி கூறினார்.இதனால் "எனது பிறந்தநாளை முன்னிட்டு எந்த விதமான கொண்டாட்டங்களிலும் ஈடுபட வேண்டாம் என்று நாடு முழுவதும் உள்ள அனைத்து காங்கிரஸ் தொண்டர்களுக்கும், நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.என்று கூறியுள்ளார்


Next Story