வயிற்றில் பேண்டேஜ் வைத்து தைத்த மருத்துவர்கள் - பெண் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டம்

வயிற்றில் பேண்டேஜ் வைத்து தைத்த மருத்துவர்கள் - பெண் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டம்
x

உத்தரபிரதேசத்தில் அலட்சியத்தால் மருத்துவர்கள் வயிற்றில் பேண்டேஜ் வைத்து தைத்ததால் பெண் உயிரிழந்ததாக கூறி, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் அலட்சியத்தால் மருத்துவர்கள் வயிற்றில் பேண்டேஜ் வைத்து தைத்ததால் பெண் உயிரிழந்ததாக கூறி, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்தரபிரதேசத்தின் பன்ஸ் கேரி கிராமத்தை சேர்ந்த சம்சர் அலி, வயிற்று வலியால் அவதிப்பட்ட தனது மனைவியை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

பின்னர், வீட்டுக்கு சென்ற சம்சர் அலியின் மனைவிக்கு தொடர்ந்து வயிற்று இருந்துள்ளதால் மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சையின் போது, வயிற்றில் பேண்டேஜ் வைத்து தைக்கப்பட்டது தெரிய வந்தது.

பின்னர், அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வயிற்றில் இருந்த பேண்டேஜ் அகற்றப்பட்டது. எனினும், அந்த பெண் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story