பாஜகவை கண்டு பயப்படவில்லை, நாங்கள் கோழைகள் அல்ல - மம்தா பானர்ஜி பேச்சு
விசாரணை அமைப்புகள் மூலம் பயமுறுத்த முயற்சிக்காதீர்கள் என மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.
கொல்கத்தா,
கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற தியாகிகள் தின பேரணியில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். 1993-ல் இளைஞர் காங்கிரஸ் பேரணியில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில், திரிணாமுல் காங்கிரஸால் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 21-ஆம் தேதி தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
அந்த வகையில் இன்று நடந்த பேரணியில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் மம்தா பானர்ஜி உரையாற்றினார். அப்போது மத்திய அரசுக்கு எதிராக அவர் பேசியதாவது :
மத்திய அரசு சத்தீஸ்கரை உடைக்கப் பார்க்கிறார்கள். மேற்கு வங்காளத்தை உடைக்கப் பார்க்கிறீர்கள். மேற்கு வங்காளத்திற்கு சவால் விடாதீர்கள். மேற்கு வங்காள புலி மிகவும் ஆபத்தானது. இங்கு அனைவரும் திரிணாமுல் காங்கிரஸுடன் நிற்கிறார்கள். அவர்கள் அவ்வாறு செய்தனர். 2
கடந்த 7 மாதங்களாக ஏழைகளுக்கு ஊதியம் கிடைப்பதில்லை. வங்காளத்தில் அனைத்து திட்டங்களையும் நிறுத்தினீர்கள். பாஜகவை கண்டு நாங்கள் பயப்படவில்லை. அமலாக்க இயக்குநரகம், மத்திய புலனாய்வுப் பணியகம் போன்ற விசாரணை அமைப்புகளை கொண்டு எங்களை பயமுறுத்த முயற்சிக்காதீர்கள். நாங்கள் கோழைகள் அல்ல. நாங்கள் போராடி வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.